search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலக்காடு விபத்து"

    • பாலக்காடு அருகே இரு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

    காயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×